Tuesday, April 12, 2011

மௌன சாதனை

ஓம் குரு பிரம்மா குருர் விஷ்ணோ குருர் தேவோ மகேஸ்வரா,
குரு சாக்ஷாத் பரப் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:

     மௌனம் என்பது ஒரு மனிதனுடைய உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தி ஆத்மாவை தெய்வத்துடன் சாட்சாத்காரம் ஆக்கும் இயல்புடையது."மௌனம் சர்வார்த்த சாதகம்" என்று வடமொழியிலே சொல்லுவார்கள். மௌனம் மற்ற எல்லாக் காமனைகளையும் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு பேரு வழியாக இருக்கிறது. மௌனம் இதுவரை நம்மை வந்து அடையாத பல்வேறு வகையான் சித்திகளை சுமந்து வந்து சேர்க்கும் பெருங்கலனாக விளங்குகின்றது. மௌனம் எல்லாத் தடைகைளையும் நீக்கி - முத்தடைகளையும் நீக்கி, அவைகளுக்குரிய காரணங்களையும் நீக்கி, மௌனம் இருப்பவனை எல்லா வகையிலும் நலம் பெற்றவனாக ஆக்கும் ஒரு பெரும் துணைவனாக விளங்குகின்றது.

      மௌனத்தை விட ஒரு சிறந்த விரதமே உலகத்தில் கிடையாது. மற்ற விரதங்கள் எல்லாம் ஒன்றொன்றும் ஒன்றொன்றை மட்டுமே செய்து முடிக்கும் இயல்புடையதாக இருக்கும். பசியை அடக்கினால் வயிறு சுத்தமடைகிறது, ரத்தம் சுத்தமடைகிறது என்ற நிலையிலேயே பட்டினி விரதங்கள் பலன் தருகின்றன. ஆனால் மௌனமானது எல்லா இந்த்ரியங்களையும் அதாவது பஞ்ச இந்த்ரியங்களையும் ஒருநிலைபடுத்தி ஒரே முகமாக நோக்குகின்ற தன்மையை மௌனம் இருப்பவனுக்கு கொடுக்கிறது.
     மௌனம் என்றால் என்ன? மௌனம் மற்ற விரதங்களை விட, மற்ற விரதங்களில் அடைய முடியாததான, மற்ற வழிகளில் எய்த முடியாததான ஒரு பெரும் வெற்றியைக் கொண்டு வந்து சேர்ப்பதுதான் மௌனம். மௌனம் என்றால் பேசாமல் இருப்பது என்பது பொதுச் செய்தி ......

  (Contd.....)


No comments:

Post a Comment